பல வருடங்களுக்கு பின் மகளுடன் சேர்ந்த தந்தை போதையில் செய்த காரியம்!

டென்மார்க்கில் திருமண நாளன்று போதையில் மகளை துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

டென்மார்க்கை சேர்ந்த 50 வயதான தந்தை ஒருவர், மகளுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதற்கிடையில் கடந்த 2017ம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் மகளுடன் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார்.

ஆகஸ்டு மாதம் தனக்கு திருமணம் நடக்கவிருப்பதாக மகளை அழைத்துள்ளார். அதனை ஏற்று 20 வயதான மகளும் திருமணத்திற்கு வருகை தந்துள்ளார்.

திருமணம் முடிந்து அனைவரும் நள்ளிரவு நிகழ்ச்சியில் மது அருந்தியுள்ளனர். இதில் அதிக போதையான தந்தை, தன்னுடைய புதிய மனைவி உறங்க சென்றுவிட்டதை அறியாமல், அங்கு மணமகள் போன்ற ஆடை அணிந்து நின்று கொண்டிருந்த மகளை, மனைவி என நினைத்து துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

தடுக்க நினைத்து எவ்வளவோ போராடி பார்த்தாலும், அந்த இளம்பெண்ணும் போதையில் இருந்ததால் ஒன்றும் செய்ய முடியாமல் இருந்துள்ளார்.

மறுநாள் காலையில் நடந்ததை புரிந்து கொண்ட தந்தை, தன்னுடைய மகளிடம், மனைவி என நினைத்து நடந்துகொண்டதாக மன்னிப்பு கேட்டு மெசேஜ் செய்துள்ளார்.

ஆனால் கோபத்துடன் இருந்த மகள், நான் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. நான் உன்னை நிறுத்த சொன்னேன். கூச்சலிட்டேன், நீ தொடர்ந்தாய். நான் உன்னை அடித்தேன். நீ தொடர்ந்து கொண்டிருந்தாய் என பதில் அனுப்பியுள்ளார்.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி, 50 வயதான தந்தைக்கு இரண்டு ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்களுக்கு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.