மாத்தறை – திக்வெல்ல புதிய வீதி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.ஹக்மன – தெனகம – பல்லேவெல பிரதேசத்தினை சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இன்றைய விபத்தில் உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருந்த மாணவர், விடுமுறையின் போது வீடு திரும்புள்ளார். இதன் போது அவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார் என ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள பொலிஸார், மாணவர் தனது இரு நண்பர்ளுடன் வஸ்கல பிரதேசத்தில் விருந்துபசார நிகழ்வு ஒன்றுக்கு சென்று மீண்டும் திரும்பிக் கொண்டிருந்த போது இவ் அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் பயணித்த வாகனம் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இவ்விபத்தை அடுத்து வாகனத்தை ஓட்டிச் சென்ற சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.






