இந்தியாவிற்கு எதிரான ஆஸ்திரேலிய அணியில் ஆடிய வீரர்களை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து நீக்கியுள்ளது. அந்த அணியில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரே நேரத்தில் அணியில் இத்தனை பேரை வெளியேற்றுவார்கள் என யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடருக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி இலங்கைக்கு எதிரான இரு ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், இந்தியாவுக்கு எதிரான போட்டிகளில் மோசமாக விளையாடிய வீரர்களை நீக்கியுள்ளது ஆஸ்திரேலியா நிர்வாகம் நீக்கியுள்ளது.
இந்தியாவிற்கு எதிராக ஆடிய ஷான் மார்ஷ், மிட்செல் மார்ஷ், ஆரோன் ஃபிஞ்ச், பீட்டர் ஹாண்ட்ஸ்காம்ப் என ஆஸி அணியில் விளையாடிய நான்கு முன்னணி பேட்ஸ்மேன்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். ஆனால் சிறப்பாக செயல்பட்ட பந்துவீச்சாளர்கள் யாரும் அணியில் இருந்து நீக்கப்படவில்லை.
அவர்களுக்கு மாற்றாக ஜோ பர்ன்ஸ், மேட் ரென்ஷா, மார்கஸ் டபுஸ்சான், 20 வயது புகோவ்ஸ்கி அறிமுக வீரராகவும் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 24 அன்று பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆஸ்திரேலிய தலைநகர் பிப்ரவரி 1 அன்று தொடங்குகிறது.
ஆஸி. டெஸ்ட் அணி : டிம் பெயின் கேப்டன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜோ பர்ன்ஸ், பேட் கம்மின்ஸ், மார்கஸ் ஹாரிஸ், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்கஸ் லபுஸ்சான், நாதன் லயன், வில் புகோவ்ஸ்கி, மேட் ரென்ஷா, மிட்செல் ஸ்டார்க், பீட்டர் சிடில்.
BREAKING: Australia’s Test squad for #AUSvSL series:
Tim Paine (c/wk), Josh Hazlewood (vc), Joe Burns, Pat Cummins, Marcus Harris, Travis Head, Usman Khawaja, Marnus Labuschagne, Nathan Lyon, Will Pucovski, Matt Renshaw, Mitchell Starc, Peter Siddle
— cricket.com.au (@cricketcomau) January 9, 2019






