பாகற்காய் கசக்காமல், புளிக்குழம்பு செய்வது?!

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள், வயிற்றில் உள்ள பூச்சிகளை கொல்லும் பாக்ரகாய் மிகவும் அத்தியாவசியமான உணவாகும். இதனை பலர் கசக்கிறது வேண்டாம் என சொல்வது வழக்கம். ஆனால், அதை கசக்காமல் சுவையான குழம்பு எப்படி செய்வதென பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

சின்னவெங்காயம் – 200 கிராம்,
புளி – எலுமிச்சைப்பழ அளவு,
பாகற்காய் – 300 கிராம்,
வறுத்த வெந்தயப்பொடி – 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணெய் – 50மி.லி.,
தக்காளி – 2,
தனியாத்தூள் – 1½ டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
தேங்காய்த்துருவல் – 100 கிராம்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு – 2 டீஸ்பூன்,
சீரகம் – 1 டீஸ்பூன்,

செய்முறை:

  • புளியை வெண்ணீர் வைத்து கரைத்து எடுத்து கொள்ளவும். தக்காளி மற்றும் சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி கொள்ளவும்.
  • பாகற்காயை விதை நீக்கி வட்ட வட்டமாக வெட்டி பின் கழுவி எடுத்து வைத்து கொள்ளவும். பின், தேங்காய்த்துருவல், தக்காளி, சீரகம் சேர்த்து பேஸ்ட் போன்று அரைத்து கொள்ளவும்.
  • கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி பாகற்காயை இட்டு நன்கு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பின்னர், அதில் வெங்காயத்தை கொட்டி, வதக்கவும்.
  • பின்னர், பூண்டு, வெந்தயப்பொடி, தனியாத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள் தூளை அதனுடன் சேர்த்து வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதை சேர்த்து சிறிது நீரும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • குழம்பு கொதித்து வந்ததும், அதனுடன் புளிக்கரைசலை சேது நன்றாக கொதிக்க விட்டு இறக்கி பரிமாறவும். பாகற்காய் கசக்காது அப்படியே உண்ணலாம்.
  • சுவையான பாகற்காய் புளிக்குழம்பு ரெடி!!