பொங்கலுக்கு தொடர் விடுமுறை! முதல்வரின் அசத்தல் அறிவிப்பால் தமிழகமே கொண்டாட்டம்!

தமிழர் திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு தைத்திருநாள், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என ஜனவரி 15ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை அரசு விடுமுறை இருக்கும். இந்த நிலையில் 14-ஆம் தேதி திங்கள்கிழமை போகிப் பண்டிகை அன்று அரசு விடுமுறை இல்லை என்பதால் தமிழக அரசு உள்ளூர் விடுமுறை விடுவதாக அறிவித்துள்ளது.

ஜனவரி 14-ஆம் நாள் போகிப்பண்டிகை அன்றைய விடுமுறைக்கு மாற்றாக பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வேலை நாளாக செயல்பட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையினை மகிழ்ச்சியாக கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. சனி ஞாயிறு அதனைத்தொடர்ந்து திங்கள், செவ்வாய், புதன், வியாழன் என்ற ஆறு நாட்கள் விடுமுறை என்பதால் பெருநகரங்களில் வசிக்கும் மக்கள் கிராமங்களை நோக்கி படையெடுப்பது சந்தேகமில்லை.

ஏற்கனவே தமிழக அரசின் சார்பில் பெரு நகரங்களில் இருந்து கிராமங்களுக்கு செல்லபொங்கல் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு மக்களுக்கு இன்னும் மகிழ்ச்சியை கொடுக்கும் அறிவிப்பாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழர்களுக்கு மகிழ்ச்சியான பொங்கலாக அமைய வாழ்த்துகள். பொங்கலோ பொங்கல்!