தினம் ஒரு அத்திப்பழம் சாப்பிடுங்க! இந்த நோய் வராதாம்

அத்தி Moraceae தாவர குடும்பத்தைச் சேர்ந்தது. இதன் அறிவியல் பெயர் Ficus glomerata மற்றும் Ficus auriculate ஆகும். இது களிமண் நிலம் மற்றும் ஆற்றோரப் பகுதிகளிலும் நன்கு வளரும்.

அத்திப் பழங்களில் அதிக அளவு வளர்சிதை மாற்றத்தைத் தடுக்கக் கூடிய Anti Oxidants உள்ளன.

அத்திப்பழங்களில் புதியதை விட நன்றாக காய்ந்த அல்ல‍து உலரந்த அத்திபழங்களில் தான் அதிக சத்துக்கள் காணப்படுகின்றன.

அத்திபழத்தினை தினமும் சாப்பிடுவதனால் உடலில் உள்ள பல்வேறுபட்ட நோய்களை எளிதில் நீக்கி விடுகின்றது. அவை என்ன என்பதை பார்ப்போம்.

  • உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
  • அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது
  • அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.
  • அத்தி காய்களில் இருந்து கிடைக்கும் பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் ஆறும்.
  • தினசரி 2 அத்திப் பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்.
  • அத்திப் பழத்தை தினமும் 5 முதல் 10 வரை காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு பால் அருந்தினால் தாது விருத்தியாகும். ஆண்மலடு நீங்கும்.
  • போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப் பழங்களைக் வினிகரில் ஒருவாரம் வரை ஊற வைத்து அதனைத் தினமும் இரண்டு பழங்கள் வீதம் ஒரு வேளை சாப்பிடலாம்.
  • மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.