5 மனைவிகள்… : கொலைகாரனின் அதிர்ச்சி பின்னணி

பிரித்தானியாவில் பேருந்து நிறுத்தங்களில் தனியாக சிக்கும் இளம் பெண்களை மட்டும் குறிவைத்து கொலை செய்து வந்த தொடர் கொலைகாரன் தொடர்பில் அதிரவைக்கும் பின்னணித் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவின் மேற்கு லண்டன் பகுதியில் வயதான தாயாருடன் குடியிருந்து வந்தவர் லெவி பெல்ஃபீல்ட்.

இவரே நான்கு கொலைகள் தொடர்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்.

மூன்று கொலை வழக்குகள் நீதிமன்றத்தில் ஆதாரபூர்வம் நிரூபிக்கப்பட்ட நிலையில், 2010 ஆம் ஆண்டு லெவி பெல்ஃபீல்ட் மீது நான்காவது கொலை வழக்கும் பதியப்பட்டது.

ஆனால் இந்த வழக்கை விசாரித்த அதிகாரிகள் குழுவானது, லெவி பெல்ஃபீல்ட் இதுவரை 20-கும் மேற்பட்ட கொலைகள் செய்திருக்கலாம் எனவும்,

அவை எதுவும் நிர்ருபிக்கப்படவில்லை எனவும் உறுதியாக தெரிவித்துள்ளனர். கடந்த 2004 ஆம் ஆண்டு பெண்கள் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி முதன் முறையாக லெவி பெல்ஃபீல்ட் கைதாகியுள்ளார்.

தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், பிரித்தானிய வரலாற்றில் மிகவும் கொடூரமான கொலைகாரனை கைது செய்துள்ளதாக பின்னர் அறிவித்தனர்.

இரவு விடுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த லெவி பெல்ஃபீல்ட் 5 முறை திருமணம் செய்துள்ளார். இதில் இவருக்கு 11 பிள்ளைகள் உள்ளனர்.

தனது வாகனத்தில் இரையைத் தேடி நகரத்தை சுற்றிவரும் லெவி பெல்ஃபீல்ட், பேருந்து நிறுத்தங்களில் தனியாக தென்படும் சிறுமிகள் மற்றும் இளம் பெண்களை மட்டுமே குறிவைத்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அப்போது 13 வயதேயான Milly Dowler மாயமான 6 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்படுகிறார்.

இந்த கொலை வழக்கில் விசாரணை மேற்கொண்ட பொலிசார் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு பின்னர் கழுத்து நெரிக்கப்பட்டு மில்லி கொல்லப்பட்டுள்ளதாக உறுதி செய்தனர்.

ஆனால் கொலை நடந்து 8 ஆண்டுகளுக்கு பின்னரே மில்லியை கொலை செய்தது லெவி என்பது விசாரணை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டது.

லெவி பெல்ஃபீல்ட் தொடர்பாக பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் மார்ஷா மெக்டோனல்(19) மற்றும் அமேலி டிலாக்ரேன்ஜ்(22) ஆகிய இருவரையும் கொலை செய்தது லெவி என நிரூபணமானது.

இந்த வழக்கில் 2008 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே மில்லி கொலைவழக்கில் லெவியின் தொடர்பு நிரூபணமானது.

தற்போது கவுண்டி டர்ஹாம் பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பு மிகுந்த சிறையில் இரண்டு ஆயுள் கைதிகளுடன் லெவி பெல்ஃபீல்ட் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்.