வேன் – லாரி நேருக்கு நேர் மோதியது! நொறுங்கியது வாகனம்!!

புதுக்கோட்டை அடுத்த திருமயத்தில், ஐயப்பன் பக்தர்கள் சென்ற வேன் – லாரி நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளாகியது. இதில்10 பேர் உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்து அனைவரும் திருமயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஆந்திராவை சேர்ந்த சுமார் 15க்கும் மேற்பட்டோர் ஐயப்பன் கோயிலுக்கு சென்று சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென எதிரே வந்த கண்டெய்னர் லாரியில் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் உயிழந்தனர்.

இதையடுத்து, சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்தவர்களை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மேலும் 3 பேர் உயிரிழந்தனர்.

இதனால் பலி எண்ணிக்கை 10 ஆக உயர்ந்தது. போலீசின் முதல் கட்ட விசாரணையில்,
கன்டெய்னர் லாரி தவறான பாதையில் வந்து இவர்கள் வந்த வேன் மீது மோதியதாக தெரியவந்துள்ளது. விபத்தை ஏற்பட்ட உடன் அந்த லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக அங்கிருந்தவர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக தொடந்து போலீஸ் விசாரித்து வருகிறது.