சமீப ஒரு சில வாரங்களுக்கு முன் மேகாலயா ஜைண்டியா மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்ததால், லைடெயின் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, சுமார் 370 அடி ஆழம் கொண்ட நிலக்கரி சுரங்கத்தில் தண்ணீர் புகுந்தது.
இதனால் வேலை செய்து வந்த 15 தொழிலாளர்கள் சுரங்கத்தின் உள்ளே மாட்டிக் கொண்டனர்.
இந்நிலையில் தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்தவர்கள் , இந்திய கடற்படை உள் நீச்சல் வீரர்கள், மற்றும் தீயணைப்பு வீரர்கள் அனைவரும் சுரங்கத்தின் உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும் சுரங்கம் குறித்த முழுவிவரங்கள் இல்லாத நிலையில் அவர்களை மீட்பதில் சிக்கல் இருப்பதாக மத்திய அரசு விளக்கமளித்தது.
இந்நிலையில் மேற்கு அசாம் பகுதியில் உள்ள பங்னமாரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சோலிபர். அவரது மகனும் சுரங்கத்தில் சிக்கியுள்ள நிலையில், தன்னை சுரங்கத்துக்குள் செல்ல அனுமதிக்குமாறு மேகாலயா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், நான் 30 வருடங்களாக இந்தச் சுரங்கத்தில்தான் பணிபுரிந்து வருகிறேன்.அதனால் சுரங்கம் குறித்து எனக்கு நன்கு தெரியும். அதனால் என்னை ஒரு முறை உள்ளே அனுமதியுங்கள். நான் சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்கிறேன்.மேலும் என் மகனுக்காக இதை நான் செய்தே ஆகவேண்டும் என்ற கதறலுடன் கூறியுள்ளார்.






