ஒடிசா மாநிலத்தில் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் பாலத்திற்கு அடியில் முகத்தில் காயங்களுடன், உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
நடிகையான இவர் Sambalpuri albums என்ற ஆல்பத்தில் மிகவும் பிரபலமானார். குறிப்பாக, இவரது யூடியூப் வீடியோக்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர்.
இந்நிலையில், இவரது உடல் Mahanadi பாலத்துக்கு அடியில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், இது கொலையா? தற்கொலையா என பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. கணவர்தான் சிம்ரனை கொலை செய்துவிட்டார்கள் என சிம்ரனின் குடும்பத்தார் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இவரது மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.