பள்ளியில் படித்த சிறுமிகளை கணவனுக்கு விருந்தாக்கிய பெண்!

தமிழகத்தில் சிறுமிகளை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலுக்கு உட்படுத்திய 16 பேரை நீதிமன்றம் குற்றவாளிகள் என அறிவித்துள்ள நிலையில், மாணவிகள் கொடுத்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 8-ஆம் மற்றும் 9-ஆம் வகுப்பு படித்து வந்த 2 சிறுமிகள் கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11-ஆம் திகதி காணாமல் போனார்.

இதனால் இது குறித்து அந்த சிறுமிகளின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதையடுத்து இதுகுறித்து பொலிசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அந்த இரண்டு சிறுமிகளும் வடலூரில் பெண்களை வைத்துபாலியல் தொழில் செய்து வரும் சதிஷ்குமார் (28) என்பவரிடம் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதனால் பொலிசார் அந்த சிறுமிகளை மீட்டு உடனடியாக காப்பகத்தில் தங்க வைத்தனர்.

அதன் பின் பொலிசார் அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் மாணவிகள் சொன்ன தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தது.

திட்டக்குடியில் படிக்கும் போது அருகில் உள்ள பெட்டிக்கடைக்கு மாணவிகள் செல்வது வழக்கம்.

அப்போது அந்த கடையின் உரிமையாளர் தனலட்சுமி, சிறுமியிடம் ஆசையாக பேசி, பாலியல் தொழிலில் ஈடுபடும் படி வற்புறுத்தியுள்ளார்.

சிறுமி மறுத்தவுடன், அவரை மிரட்டி பலாத்காரம் செய்து, மிரட்டியுள்ளனர். அதுமட்டுமின்றி இன்னொரு மாணவியை அழைத்து வா, உன்னை விட்டுவிகிறோம் என்று கூறியுள்ளார்.

இதனால் அந்த மாணவியும் வேறு ஒரு மாணவியை அழைத்து வந்துள்ளார். அப்போது சிறுமிகள் என்று கூட பார்க்காமல், மாணவிகளை தனது கணவர் செந்தில்குமார் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தராஜ் ஆகியோருடன் பாலியல் உறவு கொள்ளச் செய்துள்ளார்.

அதன் பின் திட்டக்குடியைச் சேர்ந்த மதபோதகர் அருள்தாஸ் (60) என்பவர் வீட்டுக்கு தனலட்சுமி அனுப்பியுள்ளார்.

மதபோதகர் அருள்தாஸ் மாணவிகள் இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதைத் தெரிந்துகொண்ட அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமி என்ற பெண் இதே போன்று மாணவிகளை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபட வைத்துள்ளார்.

அந்த லட்சுமி என்ற பெண் மாணவிகளை விருத்தாசலத்தில் பாலியல் தொழில் நடத்தி வந்த கலா என்பவரிடம் 5,000 ரூபாய்க்கு விற்றுள்ளார்.

அந்த நபர் ஜெமீனா என்பவரிடம் 25,000 ரூபாய்க்கு விற்றுள்ளார். ஜெமீனா மாணவிகளை வடலூரைச் சேர்ந்த சதிஷ்குமாரிடம் அதே 25,000 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சதிஷ்குமார் மாணவிகள் இருவரையும் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் எனப் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் பொலிசார் நடத்திய தொடர் விசாரணையில் இந்த வழக்கில், மதபோதகர் அருள்தாஸ், லட்சுமி, கலா, ஜெமீனா, சதிஷ்குமார் ஆகியோரைக் கைது செய்தனர்.

இந்த வழக்கில் மேலும் சில அரசியல் கட்சிப் பிரமுகர்கள் இதில் தொடர்பில் இருப்பதாக கூறப்பட்டதால், பொது நல அமைப்புகள், அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக இந்த வழக்கு கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் திகதி வழக்கு சி.பி.சி.ஐ.டி-க்கு விசாணைக்கு மாற்றப்பட்டது.

அதில், வடலுர் சதீஷ்குமார், விருத்தாசலம் கலா, திட்டக்குடி தனலெட்சுமி, திட்டக்குடி அருள்தாஸ், விருத்தாசலம் ஸ்ரீதர், விருத்தாசலம் தமிழரசி, பண்ருட்டி மகாலட்சுமி, நெல்லிக்குப்பம் கிரிஜா, விருத்தாசலம் ஷர்மிளா பேகம், வடலூர் கவிதா, சேலம் அன்பழகன், அவரின் மனைவி அமுதா, திட்டக்குடி மோகன், திட்டக்குடி மதிவாணன், விருத்தாசலம் அன்பு , நெல்லிக்குப்பம் ஆனந்தராஜ், விருத்தாசலம் சுப்பிரமணியன், பண்ருட்டி ராதிகா மற்றும் கபிலன், ஜமீனா, செந்தில்குமார், நம்மாழ்வார் உள்ளிட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்தது.

இதில் செந்தில்குமார், நம்மாழ்வார் ஆகிய 2 பேரும் உயிரிழந்து விட்டனர். குற்றவாளிகள் தமிழரசி, சதீஷ்குமார், கபிலன், ஜமீனா ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.

இந்த வழக்கு கடலூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பண்ருட்டி மகாலட்சுமியை விடுதலை செய்தார்.

மீதமுள்ள 16 பேரை குற்றவாளி என்று அறிவித்துள்ளார். மேலும், தீர்ப்பு வரும் 7-ஆம் திகதி வழங்கப்படும் என்று கூறியுள்ளார்.