இலங்கை போக்குவரத்து சபையின் மன்னார் சாலை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இலங்கை போக்குவரத்து சபை மன்னார் சாலை ஊழியர்கள் மற்றும் வடக்கில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் இணைந்து பல கோரிக்கைகளை முன்வைத்து இன்று பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எழுத்து மூலம் உயர் பீடங்களுக்கு அறிவித்துள்ள 10 குற்றச்சாட்டுகளுக்கு உரிய தீர்வு கிடைக்கப் பெறாத காரணத்தினால் இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி வட பிராந்திய தொழிலாளர்களின் நன்மை கருதி வட பிராந்திய முகாமையாளரினை வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு தெரிவித்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் உட்பட வடக்கில் உள்ள ஏழு சாலைகளின் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றமையினால் மாணவர்கள், ஊழயர்கள், பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.