இராணுவத்தினரோ தாமோ எந்தவித பாவமும் செய்யவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தங்காலை ஹேனகடுவ விஹாரையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வில் பங்கேற்ற போது ஊடகவியலாளர்களிடம் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்திற்கோ, எனக்கோ பாவங்களை மூடி மறைத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
தமிழ் மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் நோக்கில் போராடினோம்.
வட மாகாண முன்னாள் முதலமைச்சரின் கருத்து குறித்து வருந்துகின்றேன்.
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் கூறியது போன்று எனக்கோ படையினருக்கோ பாவங்களை மூடி மறைத்துக்கொள்ள வேண்டிய அவசியமில்லை, இதனை தெளிவாக கூற வேண்டும்.
நாம் நாட்டுக்காகவும் தமிழ் மக்களின் உரிமைகளுக்காகவும் போராடியிருந்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராகவே நாம் போராடினோம். தமிழ் மக்களுக்கு அல்ல பயங்கரவாதிகளுக்கு ஆதரவளித்த ஒரு சிலருக்கு இன்று அனைத்து இராணுவ அதிகாரிகளும் குற்றவாளிகள் போல் தோற்றமளிக்கின்றனர்.
வட மாகாண முன்னாள் முதலமைச்சரின் கருத்து வருத்தமளிக்கின்றது.
நாட்டின் நிலைமைகள் குறித்து மக்கள் சரியான தீர்மானம் எடுப்பார்கள்.
மக்களுக்குத் தெரியும் இந்த அரசாங்கத்திற்கு முடியாது என்பது என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.







