திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வட்டாரத்தில் உள்ள கோதைமங்களத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 40). அ.தி.மு.கவைச் சேர்ந்த இவர் பழனி மீனவர் கூட்டுறவு சங்க இயக்குனராக உள்ளார். அவரது மனைவி தங்கவில்லம்மாள் (வயது 30). இவர்களுக்கு ஜெயராஜ் (வயது 5), அயன் சேவுககுமார் (வயது 4) ஆகிய மகன்கள் இருக்கின்றனர்.
இளையராஜா, மனைவின் தங்கை சத்யா (வயது 25). இவருக்கு ராமமூர்த்தி என்பவருடன் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். சத்யாவுக்கும் இளைராஜாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இது குறித்து தங்கவில்லம்மாள் கவண் இளையராஜாவை கண்டித்தார். அதற்கு இளையராஜா தகாத உறவு வைத்துக் கொள்வது தவறு இல்லை என்று நீதிமன்றத்திலே சொல்லப்பட்டு விட்டது என கூறியுள்ளார்.
சம்பவத்தன்று இளையராஜா யாருக்கும் தெரியாமல் சத்யாவை கடத்திச் சென்று விட்டார். இதனால் வேதனையடைந்த தங்கவில்லம்மாள் தனது 2 குழந்தைகளுக்கும் சாணிபவுடரை கொடுத்து தானும் அதனை குடித்தார். 3 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தனது மனைவி வேறு நபருடன் சென்றதால் சத்யாவின் கணவர் ராமமூர்த்தியும் விஷம் குடித்து பழனி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். விஷம் குடித்த 4 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே நேரத்தில் 4 பேரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






