மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு வருகிற நிலையில், தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து தமிழிசை விடுவிக்கப்படலாம் என தகவல் கிடைத்துள்ளது.
அடுத்த ஆண்டு பொது தேர்தல்( மக்களவை தேர்தல்) நடக்க இருக்கிறது.
வருகிற மக்களவை தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறது. தேசிய கட்சிகள் உள்பட மாநில கட்சிகளும் கூட்டணி அமைத்து எப்படி ஆட்சியை காப்பாற்றுவது என்பது குறித்து தீவிரமாக வியூகம் வகுத்து, ஆலோசனை செய்து வருகிறது.
மத்தியில் அடுத்து பாஜக தலைமையிலான ஆட்சியா?, இல்லை காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியா? என்ற விவாதம் அனைத்து இடத்திலும் சூடு பிடித்து இருக்கிறது.
இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் தமிழிசையை, பதவியில் இருந்து நீக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், தமிழிசையை நீக்கி விட்டு, எஸ்.ஆர் சேகரை நியமிக்க பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வரும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பாஜகவில் உச்சகட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது.