நாயாக மாறி, நாக்கை நீட்டிய அமலாபால்!

தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை அமலாபால். அதனை தொடர்ந்து அவர் தெய்வத்திருமகள், வேட்டை, முப்பொழுதும் உன் கற்பனைகள், வேலையில்லா பட்டதாரி, திருட்டு பயலே,ராட்சசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

மேலும் அமலாபால் இயக்குநர் விஜய்யைக் காதல் திருமணம் செய்து, 1ஆண்டிலேயே விவாகரத்தும் பெற்றார்.அதன்பிறகு அவர் தற்பொழுது ஏராளமான படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமின்றி அமலா பால் தற்போது சமூகவலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் கூட சிகிரெட் பிடிப்பதுபோல புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

இந்நிலையில் அமலா பால் தனது டிவிட்டர் பக்கத்தில், படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் எனது பொழுதை நாயுடன் சந்தோஷமாக செலவிட்டு வருகிறேன என தான் வளர்க்கும் செல்ல நாயுடன் விளையாடுவதை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளார். மேலும் அதில் நாயை போல நாக்கை வெளியே நீட்டி போஸ் கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.