சூடான் நாட்டில் நடைமுறையில் இருக்கும் ரொட்டி உற்பத்திகளுக்கான அரசு வழங்கும் மானியங்களை அதிரடியாக நிறுத்தியதன் காரணமாக ரொட்டிகளின் விலையானது அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக மக்களிடையே கடுமையான கொந்தளிப்பை ஏற்படுத்தி., அதற்காக மக்கள் அனைவரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த 19 ம் தேதி முதலாகவே இந்த போராட்டமானது கடுமையாக தீவிரமடைய தொடங்கியது. இதன் காரணமாக போராட்டக்காரர்கள் அங்குள்ள பிரதான சாலைகளில் போராட்டங்களில் ஈடுபட துவங்கினர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அங்குள்ள கடைகளை அடித்து நொறுக்கி., கடைகளில் இருக்கும் பொருட்களை கொள்ளையடித்து செல்ல துவங்கினர். இதனை கட்டுப்படுத்துவதற்காக கவலை துறையினர் காலவரை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட துவங்கியது. தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் தற்போது வரை 19 பேர் உயிரிழந்ததாகவும்., 19 பேரில் 2 பேர் காவல் துறையினர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போராட்டத்திற்கு ஆதரவாக பத்திரிகையாளரும் இறங்கியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது., இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பத்திரிகையாளர்களை விசாரணை அழைத்து சென்ற காவல் துறையினர் விசாரணைக்கு பின்னர் விடுதலை செய்தனர். இந்த பத்திரிக்கையாளர்கள் போராட்டமானது நாளை வரை நடைபெறும் என்ற தகவல் கிடைத்துள்ளது.
மக்களுக்கான போராட்டத்தில் கட்டவிழ்த்து விடப்படும் வன்முறைகளுக்கு எதிராக கோபமடைந்த அமைச்சர் ஒருவர் இராஜினாமா செய்ததன் காரணமாக பெரும் அரசியல் நெருக்கடியும்., போராட்டம் தீவிரமடைவதும் என்று பல போராட்டங்கள் மீண்டும் வெடிக்க உள்ளதால் காவல் துறையினர் போராட்டம் நடைபெறும் பகுதியில் குவிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர்.






