திருமணம் செய்து கொள்ளும் நேரத்தில் தான் 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக மணப்பெண் கூறிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஜேமி போர்ப்ஸ் என்ற பெண்ணும் சார்லி என்ற நபரும் டேட்டிங் இணையதளம் ஒன்றின் மூலம் கடந்த மாதம் நட்பானார்கள்.
பின்னர் இருவரும் தீவிரமாக காதலிக்க தொடங்கினார்கள்.
இந்நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தில் ஜேமிக்கும், சார்லிக்கும் திருமணம் நடக்க ஏற்பாடுகள் நடந்தது.
அப்போது மணமேடையில் இருவரும் நின்றிருந்த போது திடீரென மணப்பெண் ஜேமி, சார்லியிடம் பரிசுப்பொருளை கொடுத்தார்.
அதை பிரித்து பார்த்த போது உள்ளே மருத்துவமனை எக்ஸ்ரே இருந்தது. அதில் ஜேமி கர்ப்பமாக இருப்பது தெரிந்தது.
ஜேமி அப்போது கூறுகையில், நான் என் வருங்கால கணவர் சார்லியின் குழந்தையை வயிற்றில் சுமக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என கூறினார்.
இதை கேட்டு மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றார் சார்லி.
அவர் கூறுகையில், திருமண நேரத்தில் இந்த மகிழ்ச்சியான செய்தியை ஜேமி கூறுவார் என நான் நினைக்கவில்லை.
இது வாழ்நாளில் மறக்கமுடியாத தருணம் என கூறினார். இதன்பின்னர் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.