பெண்களை வசியம் செய்து தகாத தொழிலா? கிளி ஜோசியர் கொல்லப்பட்டதன் பின்னணி!

திருப்பூரில் பெண்களை வசியம் செய்து வந்த கிளி ஜோசியர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் கொலையாளி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொலை நடந்த இடத்தில் கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் கூறப்பட்டுள்ள பரபரப்பு தகவல்களை வைத்து பொலிசார் விசாரணயை தொடங்கியுள்ளனர்.

கொலையாளி வீசிச்சென்ற துண்டு பிரசுரத்தில் இருந்ததாவது,

திருப்பூர் குமரன் பார்க் ரோட்டில் கிளிஜோதிடம் செய்வது என்ன?இவன் திருப்பூர் மங்கலம் பாரதி புதூரை சேர்ந்தவன். பெயர் ஜே.ரமேஷ் என்கிற குமார். இவன் கடந்த 14 வருடங்களுக்கு மேல் பூங்காவுக்கு வெளியில் அமர்ந்து பூங்காவுக்கு வரும் பெண்களையும், காதலர்களையும் கண்ணி வைத்து, தீயசக்தி சாத்தானை வைத்து, பிடித்து பாலியல் தொழில் நடத்தி வருகிறான்.

இவனுக்கு பின்னால் சில அரசியல்வாதிகள், சில முக்கிய பிரமுகர்கள், சில பொலிஸ் அதிகாரிகள், சில நிறுவன முதலாளிகள் மற்றும் அதன் கும்பலை சேர்ந்தவர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

எனக்கும் போயம்பாளையம் ராஜாநகரை சேர்ந்த பெண் ஒருவருக்கும் கடந்த 9 வருடங்களாக பழக்கம் இருந்து வந்தது. எங்கள் இருவருக்கும் பிறந்த ஒரு மகன் உள்ளான்.

கடந்த 2016-ம் ஆண்டு மே மாதம் 20-ந்தேதி அனுப்பர்பாளையம் பொலிஸ் நிலையத்தில் இருந்து அவளை என்னிடம் இருந்து பிரித்து கூட்டிச்சென்று விட்டான்.

கடந்த 2 வருடம் 7 மாதங்களாக ரமேஷின் பிடியில் அவள் சிக்கிக்கொண்டு தவித்து வருகிறாள். இதனால் அந்த பெண்ணை மீட்டு, கூட்டிச்சென்றவர்களுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த விஷயத்தில் முறையான விசாரணை செய்து கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளை பாலியல் தொழில் செய்ததை கண்டுபிடித்தது போல இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும்.

இப்படிக்கு: இவளால் பாதிக்கப்பட்டவன்.

இவ்வாறு அந்த பிரசுரத்தில் உள்ளது,

யார் அந்த ரகு?

ரகு கடந்த 10 வருடமாக திருப்பூரில் அறை எடுத்து தங்கி, பனியன் கம்பெனியில் பணியாற்றியுள்ளார். பிரிந்து சென்ற காதலியை சேர்த்து வைக்கக்கோரி ஜோதிடரை நாடி உள்ளார். ஒரு காலக்கட்டத்தில் காதலி மாயமானதும் அதற்கு ஜோதிடர் தான் காரணம் என ஆத்திரத்தில் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஜோதிடரை நேற்று வெட்டிக் கொலை செய்துள்ளார். ரகுவை திருப்பூர் பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாகவே கிளிஜோதிடர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்பது கொலையாளி வினியோகித்த துண்டு பிரசுரம் மூலம் தெரிய வருகிறது. கொலைக்கு முன்பாக கொலையாளி கொடுக்கும் வாக்குமூலம் போலவே துண்டு பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்ட வாசகங்கள் அமைந்துள்ளன.