சன் டிவியை பின்னுக்கு தள்ளிய பிரபல தொலைக்காட்சி!

முன்னணி தொலைக்காட்சிகள் ஒவ்வொன்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு போட்டிபோட்டுக்கொண்டு பல நிகழ்ச்சிகளை வழங்கி வருகின்றது. தனியார் தொலைக்காட்சிகள் (குறிப்பாக Vijay , சன் குழுமம்) வந்ததில் இருந்து, பல நிகழ்ச்சிகளை போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்புகிறனர். இதற்கு முழு காரணம் குறிப்பாக டி.ஆர்.பி.தான். விஜய் & சன் குழும தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எல்லா தொடர்களிலும், போட்டி போட்டுகொண்டு ஒளிபரப்புகிறனர். குறிப்பாக விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ், சன் டிவியில் லட்ஷமி ஸ்டோர்ஸ் என்று ஒளிபரப்புகின்றனர்.

தொலைக்காட்சியை பொறுத்தவரை டி.ஆர்.பி. போட்டி என்பது நடந்துக்கொண்டே தான் உள்ளது. இதில் எப்போதுமே தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்து இருந்தது சன் தொலைக்காட்சிதான். காரணம் அதில் ஒளிபரப்பான சீரியல்கள்தான் காரணம். மற்ற சேனல்கள் அதை கிட்ட கூட நெருங்க முடியாத அளவிற்கு இருந்தது. ஆனால், தற்போது இந்த நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ‘செம்பருத்தி’ சீரியல் டி.ஆர்.பியில் முதலிடத்தை பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நாயகி’ சீரியல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. சன் தொலைக்காட்சியை பின்னுக்கு தள்ளி ஜீ தமிழ் முன்னேறியது பலருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.