நாகர்கோவிலில் உள்ள ஒரு லாட்ஜின் ஊழியர்களுக்கும் மலையாள பட நடிகை ஒருவருக்கும் இடையே நள்ளிரவில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு அந்த பகுதியே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தை ஒட்டியுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் திரைப்பட ஷூட்டிங் நடப்பது வழக்கம். நாகர்கோவில் அருகே ஒரு மலையாள படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகள், இயக்குநர், உதவியாளர்கள் செட்டிகுளம் அருகே ஒரு தனியார் லாட்ஜில் தங்கியுள்ளனர்.
அந்த லாட்ஜில் தங்கியபடியே காலை படப்பிடிப்புக்கு சென்றுவிட்டு இரவில் லாட்ஜிக்கு திரும்புவார்கள். இந்நிலையில் நேற்று இரவு படப்பிடிப்பு முடிந்து லாட்ஜுக்கு திரும்பிய மலையாள நடிகை மஞ்சு சவேர்கர், தனது அறையில் படுக்கை விரிப்பு மாற்றப்படாமல் அப்படியே இருந்ததை பார்த்து, அங்கு இருந்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
வேலும் தனது பேட்டி படுக்கையுடன் நடிகை மஞ்சு வெளியேற முற்படவே, அவரை தடுத்து நிறுத்திய ஊழியர்கள், லாட்ஜிக்கு கட்ட வேண்டிய வாடகை பணம் 60 ஆயிரம் ரூபாயை கொடுத்துவிட்டு கிளம்புங்கள் எனக் கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த நடிகை ஊழியர்களிடம் அழுது ஆர்ப்பாட்டம் செய்தார்.
இதனையடுத்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, படக்குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் வாடகை பாக்கியை தருவதாக படக்குழு ஒப்புக்கொண்டது. நடிகை ஒருவர் அழுது கொண்டே ஆர்ப்பாட்டம் செய்தது அந்த பகுதியில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியது.






