1 கோடி ரூபாய் இட்லியை சாப்பிட்டது ஜெயலலிதா இல்லையாம்., சசிகலா தானம்.!! சொன்னது யார் தெரியுமா.?!

ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நல குறைபாடுகளால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தொடர்ந்து 75 நாள்கள் தொடர் சிகிச்சை எடுத்துக்கொண்டார். கடைசியில் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 5-ஆம் தேதி காலமானார்.

இவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பலர் புகார் தெரிவித்தனர். இதனையடுத்து சென்ற வருடம் 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 25ம் தேதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு தமிழக அரசால் அரசாணை வெளியிடப்பட்டது. அதை தொடர்ந்து, இந்த ஆணையத்தில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரது சகோதரர் ஜெ.தீபக், சசிகலா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, சாட்சியம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கான செலவு மட்டும் ரூ. 1.17 கோடி என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்திடம் அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்ததாவது,

* ஜெயலலிதா சிகிச்சைக்காக லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பீலேவுக்கு ரூ.92.7 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

* அதேபோல், பிசியோதெரப்பி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு ரூ.1.29 கோடி வழங்கப்பட்டுள்ளது.

* ஜெயலலிதா தங்கி இருந்த வார்டுக்கான 75 நாள் வாடகை செலவு ரூ. 24 லட்சம் ஆகும்.

* ஜெயலலிதாவை கவனித்துக்கொண்ட சசிகலா குடும்பம் தங்கிய அறை வாடகை ரூ. 1.24 கோடி.

* ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது உணவுக்கான செலவு செய்யப்பட்ட தொகை : ரூ. 1.17 கோடி .

* மொத்தமாக அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து 75 நாட்களுக்கு ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு ரூ.6.85 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பில் தொகையில் கடந்த 2016 அக்டோபர்13-ல் காசோலையாக ரூ.41,13,304 அப்போலாவிடம் வழங்கப்பட்டது. இதை அடுத்து ஜெயலலிதா மறைந்த பின், 2017- ஜூன் 15 ஆம் தேதி அதிமுக சார்பாக, அப்போலோ நிர்வாகத்திற்கு காசோலையாக ரூ.6 கோடி வழங்கப்பட்டது. மீதமுள்ள ரூ.44.46 லட்சம் ,அதிமுக தர வேண்டும் என அப்போலோ நிர்வாகம் தற்போது தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் இது குறித்து செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது உணவுக்கான செலவு ரூ.1½ கோடி என்பது அபத்தமானது. அவர் ரூ. 1½ கோடிக்கு உணவு சாப்பிடவில்லை. சசிகலா குடும்பத்தை சேர்ந்தவர்கள் சாப்பிட்டு இருப்பார்கள்” என்று தெரிவித்துள்ளார்.