ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினிடம் இரண்டாவது திருமணம் எப்போது செய்யப்போகிறீர்கள் என்று கேட்ட கேள்விக்கு சாதுர்யமாக பதிலளித்துள்ளார்.
ரஷ்யாவில் நான்காவது முறையாக ஜனாதிபதியாக பதவியேற்று உலகத்தலைவர்கள் மத்தியில் தனிபெரும் தலைவராக இருந்து வருகிறார் புடின்.
புடின் கடந்த 1983-ஆம் ஆண்டு லுயூத்மிலா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். அதன் பின் 2013 -ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.
இவர்களுக்கு மரியா, யெகா டெரினா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் புடின் சமீபகாலமாக முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கனையும், அரசியல்வாதியுமான அலினா கபேவேவுடன் டேட்டிங் செய்ததாக செய்திகள் வெளியாகின.
அதுமட்டுமின்றி அவரைத் தான் புடின் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் கூறப்பட்டது.
இதையடுத்து ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஆண்டுதோறும் நடைபெறும் செய்தியாளர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவரிடம் செய்தியாளர் ஒருவர், நீங்கள் எப்போது திருமணம் செய்துகொள்ளப் போகிறீர்கள்? யாரைத் திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள்? என்று கேட்டார்.
அதற்கு புடின் ஒரு மரியாதைக்குரிய நபரான நான் ஒரு நாள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். இதனால் புடின் இரண்டாவது திருமணம் செய்யப்போவது உறுதி என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.