கென்சிங்கிடன் அரண்மனையில் நடைபெற்ற ஆடம்பரமான கிறிஸ்துமஸ் மதிய உணவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரித்தானிய ராணி, தன்னுடைய பாதுகாவலர்களுடன் ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ஆன்றுதோறும் கென்சிங்டன் அரண்மனையில் நடைபெறும் ஆடம்பரமான கிறிஸ்துமஸ் மதிய உணவு நிகழ்ச்சியில், அரச குடும்பத்தை சேர்ந்த அனைவருமே பங்கேற்பார்கள்.
இதில் கலந்துகொள்ளவதற்காக அரசு குடும்பத்தை சேர்ந்த இளவரசர்களும், இளவரசிகள் மற்றும் குழந்தைகளும் நேற்றே அரண்மனைக்கு வந்து சேர்ந்தனர்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 92 வயதான ராணி, தன்னுடைய பாதுகாவலர்களுடன் முதல் வகுப்பு டிக்கெட் மூலம், லண்டன் நோர்போக்கில் கிங் லின் ரயில் நிலையத்திற்கு இன்று காலை வந்து சேர்ந்தார்.
அவர் சிரித்தபடியே ரயில் நிலையத்தில் பாதுகாவலர்கள் மத்தியில் நடந்து வரும் புகைப்படங்கள் வெளிவந்துள்ளன.
முன்னதாக இளவரசிகள் கேட் மற்றும் மெர்க்கலிற்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டுள்ளதாக பல்வேறு வதந்திகள் வெளியாகியிருக்கும் நிலையில் இருவருமே நேற்று மகிழ்ச்சியுடனே அரண்மனைக்கு வருகை தந்திருந்தது குறிப்பிடத்தக்கது.