பேஸ்புக் காதலினால் வந்த விபரீதம்…..காதலியை துஷ்பிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்கமறியல்..!!!

திருகோணமலைப் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவரை அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு இன்று திருகோணமலை நீதிமன்ற நீதிவான் எம்.எச்.எம்.ஹம்ஸா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, சந்தேகநபரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் சீனக்குடா, திருகோணமலை பகுதியை சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

சந்தேகநபர் குருணாகல் பகுதியை சேர்ந்த 15 வயதுடைய சிறுமியை பேஷ்புக் ஊடாக ஆறு மாதங்களாக காதலித்து வந்துள்ளார்.இந்த நிலையில், திருகோணமலை பகுதியை சேர்ந்த சந்தேகநபர் சிறுமியை தேடிச் சென்று தனிமையில் சந்தித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதன்பின்னர் சிறுமியை அவரது பெற்றோர்களுக்கு தெரியாமல் திருகோணமலைக்கு அழைத்து சென்று நண்பர் ஒருவரின் வீட்டில் வைத்து சந்தேகநபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.சம்பவம் தொடர்பில் சிறுமியின் பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இதேவேளை சிறுமி சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சீனக்குடா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.