தமிழகத்தின் மழைக்கு ஆதாரமாக விளங்குவது வடகிழக்கு பருவமழைதான்., இந்த வடகிழக்கு பருவமழையானது அக்டோபர் மாதத்தில் தொடங்கப்பட்டு பின்னர் டிசம்பர் மாதத்தில் நிறைவு பெரும். இந்த காலத்தில் தான் தமிழகத்தில் நல்ல மழையானது பெய்து தண்ணீர் பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொள்ளும்.
அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2016 ம் வருடத்தில் பெய்த மழையானது பெரும் ஏமாற்றத்தை தரவே., கடந்த வருடத்தில் பரவலான மழை பெய்தது. மேலும்., 2016 ம் வருடத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது., மழை பெய்யும் அளவை விட சுமார் 61 விழுக்காடு அளவிற்கு குறைவாகவும்., கடந்த 2017 ம் வருடத்தில் சுமார் 9 விழுக்காடு அளவிற்கு மட்டுமே குறைவான அளவில் மழை பெய்தது.
மேலும்., இந்த வருடத்தின் வடகிழக்கு பருவமழையானது வழக்கத்தை விட அதிகமாக பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில்., அக்டோபர் மாதத்தில் தொடங்க வேண்டிய பருவமழை தாமதமாக நவம்பர் மாதத்தில் தொடங்கியது.
இந்த வருடத்தில் வடகிழக்கு பருவமழையை நம்பியிருந்த நிலையில்., வழக்கத்தை விட சுமார் 21 விழுக்காடு அளவிற்கு குறைவான அளவு மழைபெய்துள்ளதும்., சென்னை மற்றும் மேலும் 9 மாவட்டங்களில் போதியளவு மழை பெய்யாததன் காரணமாக வறட்சி துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வகையில்., சென்னை., கரூர்., தருமபுரி., சேலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வழக்கத்தை விட 50 விழுக்காடு அளவிற்கு குறைவான அளவே மழை பெய்துள்ளதாகவும்., வடகிழக்கு பருவமழை தொடக்கத்தில் இருந்து சுமார் 74 செ.மீ மழை பெய்திருக்கவேண்டிய நிலையில் வரும் 34 செ.மீ அளவிற்கு தான் மழை பெய்துள்ளது.
மேலும்., திருச்சி., வேலூர்., திருவள்ளூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் 60 விழுக்காடு அளவிற்கு மழை பெய்துள்ளதன் காரணமாக வழக்கத்தை விட 60 விழுக்காடு அளவிற்கு குறைந்த அளவே மழையை பெற்றுள்ளது.
இந்த விபரங்களை கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது சென்னையில் நீர் ஆதாரமாகமாக விளங்கும் ஏரிகளில் தற்போது 1.5 டி.எம்.சி நீர் இருப்பு உள்ளது தெரியவருகிறது., மேலும் சென்ற வருடம் 5 டி.எம்.சி நீர் இந்த சமயத்தில் இருந்த போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கத்தை விட குறைவாக பெய்துள்ள மழையளவை பற்றி ஒவ்வொரு தரப்பினரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில்., இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே வரும் வருடத்துக்கான பஞ்சாங்கத்தை கணித்த ஜோதிடர்கள் வரும் வருடத்தில் தண்ணீராலும்., பஞ்சத்தாலும் அழிவு ஏற்படும் என்று தெரிவித்தது குறிப்பிடதக்கது.






