சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்தி கெத்துக்காட்டிய ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதன் முதல் டெஸ்ட் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தது.

இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்க்ஸை தொடங்கிய ஆஸ்திரேலிய அணி 326 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணி தரப்பில் இருந்து அதிகபட்சமாக ஹாரிஸ் 70 ரன்கள் எடுத்தார்., இந்திய அணியில் இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளும், ஹனுமான் விஹாரி, பும்ரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், முதல் இன்னிங்க்ஸை ஆடிய இந்திய அணி 283 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. கேப்டன் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் சதம் அடித்து சாதனை படைத்தார். ஆஸ்திரேலியா அணி தரப்பில் இருந்து நாதன் லியான் 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இதையடுத்து, இரண்டாவது இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 243 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் அந்த அணி 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

இதையடுத்து, இந்திய அணி 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட தொடங்கியது. இதில், ஆரம்பமே அதிர்ச்சியளிக்கும் விதமாக முதல் ஓவரிலேயே ஸ்டார்க் பந்தில் கே.எல்.ராகுல் போல்டனார். பின்னர், ஹஸுல்வுட் பந்துவீச்சில் புஜாரா கீப்பரிடம் கேட்ச் அவுட்டானார். இதனைத்தொடர்ந்து, விராட் கோலி 17 ரன்களில் லியானின் சுழல் பந்தில் வெளியேறி அதிர்ச்சி கொடுக்க, மீண்டும் அவருடைய பந்திலேயே முரளி விஜய் (23 ரன்களில்) போல்டனார். அப்போது, இந்திய அணி 48 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து மேலும் தடுமாறினர்.

அடுத்து வந்த ஹனுமா – விஹாரி இணை நிதானமாக ஆடி ரன் சேர்த்தனர். ஆனாலும் ரஹானே 30 ரன்களில் ஹஸுல்வுட் பந்து வீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர், நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 112 ரன்களுக்கு இழந்திருந்தது. இந்திய அணியில் விஹாரி 24 ரன்களுடன், 9 ரன்களுடன் களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணியில் ஹஸுல்வுட், லியான் ஆகியோர் 2 விக்கெட்டுகளும், ஸ்டார்க் 1 விக்கெட்டும் எடுத்தார்.

இதையடுத்து கடைசி நாளான இன்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் விஹார் ஸ்டார்க் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர், சிறிது நேரம் தடுமாறிய ரிஸ்ப் பண்ட் லியோன் சூழலில் வெளியேற, உமேஷ் யாதவ் ஸ்டார்ச் பந்தில் கேட்ச் அவுட் ஆக இந்திய அணி பரிதாப நிலையில் இருந்தது. கடைசியாக வந்த இஷாந்த் சர்மா மற்றும் பும்ரா ஆகியோரை கம்மின்ஸ் வெளியேற்ற இந்திய அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக நாதன் லயன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது, இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.