துறவிகள் மீது கார் மோதல்: 2 பேர் பலி!

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒரப்பம் தேசிய நெடுஞ்சாலையில் துறவிகள் நடைபயணமாக செல்லும்போது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே ஒரப்பம் தேசிய நெடுஞ்சாலையில், ஜெயின் துறவிகள் நடைபயணம் செல்லும் பொது, அந்த வழியாக வந்த கார், திடீரென துறவிகள் மீது மோதியதில், குஜராத் மாநிலம், ஜாம் நகரைச் சேர்ந்த ஜிந்தர்மசூரிஜி (69), மத்தியபிரதேசம், உத்தேன் மாவட்டத்தைச் சேர்ந்த பூஜா (20) ஆகிய 2 பெண்கள் உயிரிழந்தனர். மேலும்  கார் ஓட்டுநர், மிட்டப்பள்ளியைச் சேர்ந்த ஜோசப் பிராங்ளின் (27) என்பவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்த கந்திகுப்பம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.