போனை எடுக்காத காதலன்… விரக்தியில் தீக்குளித்த மாணவி!

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் காதலன் பேசுவதை தவிர்த்து போனை எடுக்காததால், விரக்தியடைந்த நர்சிங் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகாயம் சஞ்சீவபுரத்தைச் சேர்ந்தவர் குணசீலன். கல்லூரியில் நர்சிங் படித்து வந்த இவரது மகள் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

இந்நிலையில், இவர்களது காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்து குறித்து மாணவியை கண்டித்துள்ளனர். மேலும் மாப்பிள்ளைப் பார்த்து திருமணம் செய்து வைக்கப் போவதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, தனது காதலனை போனில் தொடர்புகொண்டு தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு கேட்டுள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த காதலன் அதன்பிறகு மாணவியின் போனை எடுப்பதை தவிர்த்து வந்துள்ளார்.

இதுவும் மாணவியின் பெற்றோருக்கு தெரிய வர, கடுமையாக எச்சரித்துள்ளனர். இதன் காரணமாக மனமுடைந்த குறித்த மாணவி, நேற்று நள்ளிரவில் வீட்டில் உள்ள கழிவறையில் தீக்குளித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு தூங்கிக்கொண்டிருந்த பெற்றோர் எழுந்து வந்து, தங்களது மகளை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால், அவர்களின் முயற்சி பலனிக்கவில்லை. குறித்த மாணவி உடல் முழுவதும் தீப்பற்றியதால் சம்பவ இடத்திலேயே பலியானார்.

அதனைத் தொடர்ந்து, மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள பொலிசார், காதலன் குறித்து தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.