தமிழகத்தில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து மிரட்டி நகை, பணங்களை கொள்ளையடித்து செல்லும் கொள்ளையனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சென்னை அம்பத்தூர், கொரட்டூர் உள்ளிட்ட இடங்களில் இரவில் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொள்ளையடிக்கும் கொள்ளையன் ஒருவன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக பொலிசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து பொலிசார் அந்த கொள்ளையனை பிடிப்பதற்கு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த ஒரு நபரை பொலிசார் மடக்கி விசாரித்த போது, பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
அவனுடைய மொபைல் போனை பார்த்த போது, ஏராளமான பலாத்கார வீடியோக்கள் இருப்பதைக் கண்டு பொலிசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
குறிப்பாக அந்த பலாதகார வீடியோக்கள் அனைத்திலும் இவன் இருந்ததால், பொலிசார் அவன் தான் திட்டுமிட்டு இந்த செயலை செய்திருக்க வேண்டும் என்று கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. அவன் கிருஷ்ணகிரி மாவட்டம் மாத்தூரைச் சேர்ந்தவன்.
அவனுடைய பெயர் அறிவழகன். பெங்களூரில் மென்பொறியாளராக பணிபுரிந்து வந்த அவன் ஓசூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அங்கிருந்து சென்னைக்கு தப்பி வந்துள்ளான்.
கடந்த 2017-ஆம் ஆண்டில் சென்னையின் முக்கிய பகுதிகளில் கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி போன்ற வீட்டில் தனியாக இருந்த 50 பெண்களை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி நகை பணம் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆனால் காவல்துறையினர் வழக்கை திறம்பட நடத்தாததால் 3 மாதங்களுக்கு முன்பு அறிவழகன் ஜாமீனில் வெளி வந்துள்ளான்
ஜாமீனில் வெளியே வந்த பின்னர் இரு சக்கர வாகனம் ஒன்றை திருடிக் கொண்டு இரவு நேரங்களில் மீண்டும் கைவரிசை காட்ட தொடங்கி உள்ளான்.
பெண்கள் தனியாக இருக்கும் வீடுகளின் கதவை தட்டிவிட்டு வாசல் அருகில் பதுங்கிக்கொள்ளும் அவன், கதவை திறந்து வெளியே வந்து பெண்கள் பார்க்கும் நேரத்தில் அசுரவேகத்தில் அவர்கள் மீது பாய்ந்து வீட்டிற்குள் இழுத்து சென்று, அவர்களை பலாத்காரம் செய்து அதை வீடியோவாக எடுத்து மிரட்டி வீட்டில் இருக்கும் நகை, பணம் போன்றவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளான்.
மேலும் சில வீடுகளில் ஏற்கனவே எடுத்த வீடியோவை காட்டி மிரட்டி கணவன் வீட்டில் இருக்கும் போதே அந்த பெண்களிடம் கட்டாய பாலியல் வல்லூறவில் ஈடுபட்ட அதிர்ச்சி சம்பவமும் நடந்துள்ளது.
குடும்ப மானம் போய்விடும் என கருதி பெரும்பாலான பெண்கள் புகார் அளிக்காததால், அறிவழகன் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளான்.
கொள்ளையன் அறிவழகனுக்கு பின்னணியில் இரு வழக்கறிஞர்கள் இருப்பதாகவும் அவர்கள் இவனிடம் இருந்து கொள்ளையடித்த நகை பணத்தை பெற்று கொள்வதோடு, அறிவழகன் வாகன சோதனையில் சிக்கினால் தனக்கு தெரிந்தவர் என்று கூறி சிபாரிசு செய்து அவனை தப்ப வைத்ததாகவும் கூறப்படுகின்றது.
இவனால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் பொலிசாரிடம் கூறுகையில், இவனை போன்ற கொடூர குற்றவாளிகளுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் ஆஜராக முன்வரகூடாது என்றும், இவனுக்கு மரணதண்டனை கொடுக்க வேண்டும் என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார்.
இப்படி 70-க்கும் மேற்பட்ட பெண்களை இவன் பாலியல் பலாத்காரம் செய்து மிரட்டி வீடியோ எடுத்து கொள்ளையடித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.






