மேற்கு ரஷ்யாவில் உள்ள Tolokonnikovo கிராமத்தில் கடந்த பல ஆண்டுகளாக Lyudmila Vyacheslavovna என்ற பெண்மணி மட்டுமே குடியிருந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
எழுபது வயதான Lyudmila Vyacheslavovna தினசரி காலையில் 4 மணிக்கு எழுவதாகவும், அதன் பின்னர் மரம் வெட்டுதல், தண்ணீர் இறைப்பது, வைக்கோல் சேகரிப்பது, தையல் மற்றும் சமையல் செய்வது என பம்பரமாக சுழல்கிறார்.
Tolokonnikovo கிராமத்தில் உள்ள இவர்களது 130 ஆண்டுகள் பழமையான குடும்ப இல்லத்தில் குடியிருக்கும் இவர் கால நேரம் எதையும் பார்த்து வேலை செய்வது இல்லையாம்.
இவரது கிராமத்தில் இருந்து சுமார் 3 மைல்கள் தொலைவில் இருக்கும் குடியிருப்புகளில் சென்று தமது மகளையும், பேரக்குழந்தையையும் அடிக்கடி சந்தித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் 125 மைல்கள் தொலைவில் குடியிருப்பதால் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு என சிறப்பு பண்டிகைகளை Lyudmila தனியாகவே கொண்டாடி வருகிறார்.
தனிமையில் வாழ்ந்து வந்தாலும் ரஷ்ய ஜனாதிபதியின் சிறப்பு உரைகளை தவறாமல் தொலைக்காட்சிகளில் பார்த்து வருகிறார்.
பெரும்பாலும் ஓய்வு வேளைகளில் தொலைக்காட்சி திரைப்படங்களையும், இசை நிகழ்ச்சிகளையும் மட்டுமே இவர் விரும்புகிறார்.










