ஆராய்ச்சியில் பறிபோன இரு உயிர்கள்…

அந்தாட்டிக்கா பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த ஆய்வு ஒன்றின்போது இருவர் பலியாகியுள்ளனர்.

தீயணைப்பு தொழில்நுட்ப வல்லுநர்கள் இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் National Science Foundation (NSF) தெரிவித்துள்ளது.

இச் சம்பவம் கடந்த 12 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் இவர்கள் அன்றைய தினம் திட்டமிட்டதை போன்று பராமரிப்பு பணி இடம்பெற்றிருக்கவில்லை.

இந்நிலையில் உலங்குவானூர்தியில் பறந்துகொண்டிருந்த பணியாளர்கள் இருவர் சுயநினைவு அற்ற நிலையில் கிடப்பதை அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து நெருங்கிச் செல்லும்போது கட்டிடத்திலிருந்து புகை வெளியேற ஆரம்பித்துள்ளது.

சந்தேகத்துடன் இருவரையும் அண்மித்தபோது அவர்கள் இருவரும் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

மின்னியந்திரம் ஒன்றிலிருந்து ரேடியோ ட்ரான்ஸ்மிட்டருக்கு இணைப்பு வழங்கும்போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.