காதலிப்பதாக கூறி 13 வயது பள்ளிச் சிறுமியை கடத்தி நண்பர்களுடன் பலாத்காரம் செய்த அர்ப்பான் மற்றும் அவரது கூட்டாளிகள் இர்பான்கான், முதாசீர் ஆகிய இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் வாத்திமனை பகுதியை சேர்ந்தவர் பைரோஸ் அகமது. ஓட்டல் நடத்தி வருகிறார். வரது மகள் 13 வயது சிறுமி, ஆறாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுமி கடந்த இரு வருடங்களாக காலமாக சக மாணவிகளள் சிலருடன் அதே பகுதியை சேர்ந்த வாடகை ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த டிசம்பர் 11ம் தேதி காலையும் வழக்கம் போல ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். அப்போது சிறுமியை அதே பகுதியில் உள்ள மற்றொரு ஆட்டோ டிரைவர் அர்ப்பான் மற்றும் அவரது நண்பர்கள் நான்கு பேர் பள்ளிக்கு அருகே காத்திருந்து காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். சிறுமி யாரோ ஐவருடன் காரில் செல்வதை பார்த்த சிலர் இது குறித்து சிறுமியின் தந்தை பைரோஸ் அகமதுவுக்கு தகவல் கூறினர்.
அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக ஆம்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து டி.எஸ்.பி சச்சிதானந்தம் தலைமையில் தனிப்படை அமைத்து காவல்துறை விசாரணையில் இறங்கியது.
ஐந்து இளைஞர்கலும் பெங்களூவுருக்கு சிறுமியை கடத்திச் சென்றதும், அங்கு ஒரு தனியார் விடுதியில் சிறுமியை அடைத்து பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து பெங்களூருவுக்கு விரைந்த தனிப்படை போலீசார், ஓட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்திய அர்பான், இர்பான்கான், முதாசீர் ஆகிய மூவரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள தப்ரேஸ் மற்றும் ஷேபாஸ் ஆகிய இருவரை தேடி வருகின்றனர்.
காவல்துறை விசாரணையில், இளைஞர் அர்பான் சிறுமியை காதலிப்தாக ஆசை காட்டி நண்பர்களுடன் சேர்ந்து பெங்களூருவுக்கு கடத்திச் சென்று கூட்டு பலாத்காரம் செய்தது தெரியவந்தது. ஆட்டோ டிரைவரான இளைஞர் அர்ப்பான் கடந்த வருடம் ஆம்பூரைச் சேர்ந்த தொழிலதிபரின் மகளையும் காதலிப்பதாக நாடமாடி கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததும், பிறகு தனது கூட்டாளிகள் மூலமாக அந்த பெண்ணின் குடும்பத்தாரை மிரட்டி 20 லட்சம் ரூபாய் பெற்றதும் தெரியவந்தது.
தற்போது இந்தக் கடத்தல் மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்ட ஐவர் மீதும் போக்சே சட்டப்படி வழக்கு பதியப்பட்டுள்ளது.
காதல் என்கிற பெயரில் பள்ளிச் சிறுமியை கடத்தி சென்று ஐவர் பேர் பாலியல் பலாத்காரம் செய்தது ஆம்பூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏர்படுத்தி உள்ளது.