கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை! கண்முன்னே துடிதுடித்து பலியான இளைஞர்

பிரபல பாலிவுட் நடிகை ஜரின் கானின் கார் மீது மோதி விபத்தில் சிக்கிய இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல பாலிவுட் நடிகையான ஜரின் கான் நேற்று கோவாவிற்கு சென்றுள்ளார்.

அஞ்சுனா பகுதியில் அவருடைய கார் சென்றுகொண்டிருந்த போது, பின்பக்கம் இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்துகொண்டிருந்த இளைஞர் கட்டுப்பாட்டை இழந்து நடிகையின் கார் மீது மோதி விபத்தில் சிக்கியுள்ளார்.

உயிருக்கு போராடி கொண்டிருந்த அந்த இளைஞரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை மேற்கொண்ட மருத்துவர்கள், இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட பொலிஸார், விபத்தில் சிக்கிய இளைஞர் மப்யூசா பகுதியை சேர்ந்த 31 வயதான நிதேஷ் கோரல் என தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

முன்னதாக நடிகர் ஜரின் கான், தன்னுடைய மேனேஜர் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியதுடன் தன்னை மிரட்டியதாக பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தது குறிப்பிடத்தக்கது.