உள்ள ஊர்ப்பெயர் மாற்றம்.! சென்னையில் இருந்து ஆரம்பமாகியது.!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊர்களிலும், சாலைகளிலும், தெருக்களிலும் உள்ள சமஸ்கிருதம், ஆங்கில பெயர்களை தமிழில் மாற்றுவதற்கு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான அரசாணை 2 வாரத்தில் பிறப்பிக்கப்படும் என்றும் தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார்.

மேலும், ”ஊர், தெரு பெயர் மாற்றம் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களின் பரிந்துரையின் பேரில் சுமார் 3 ஆயிரம் பெயர்கள் மாற்றப்பட உள்ளது. இதற்கான அரசாணை 2 வாரங்களுக்குள் பிறப்பிக்கப்படும்” என்று அதிரடியாக தெரிவித்துள்ளார். அதன்படி, ட்ரிப்பில்கேன் என்ற பெயர் திருவல்லிக்கேணி என்றும், Tuticorin என்பது தூத்துக்குடி என தமிழில் மாற்றப்படும் என்று அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இந்த பெயர் மாற்றத்தில் முதல் நடவடிக்கையாக இன்று சென்னையில் இருந்து தொடங்கியுள்ளது. சென்னை மாநகராட்சி வ.உ.சி. நகரில் உள்ள பிரேசர் பிரிட்ஜ் ரோடு தமிழில் ‘தேர்வாணைய சாலை’ என்றும், ஆங்கிலத்தில் TNPSC Road எனவும் பெயர் மற்றம் செய்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும், பெயர் மாற்றம் செய்யப்பட்ட சாலைக்கு புதிய பெயர் பலகை வைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.