தமிழகத்தில் தந்தை தன்னை ஏமாற்றிவிட்டதாக அவரின் 7 வயது மகள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தின் ஆம்பூரை சேர்ந்த அனுல்லா – மெக்கரீனா தம்பதியின் மகள் ஹனிபா ஜாரா (7).
இவர்கள் வீட்டில் கழிவறை கிடையாது. இதனால் சிரமத்துக்கு ஆளான ஹனிபா தனது தந்தையிடம் கழிவறை கட்டிதருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.
அதனை கேட்டு கொண்ட தந்தை அனுல்லா, பள்ளி தேர்வில் முதல் மதிப்பெண் பெற்றால் வீட்டில் கழிவறை கட்டி தருகிறேன் என கூறினார்.
இந்நிலையில் ஒரு ஆண்டாக சிறுமி ஹனிபா பொறுத்திருந்தும் தந்தை அனுல்லா கழிவறை கட்டிதரவில்லை. இதையடுத்து நேற்று நேராக காவல் நிலையத்துக்கு சென்றார் சிறுமி ஹனிபா.
அங்கு, அவர் கொடுத்த புகாரில், தந்தை சொன்னதை போல நான் தொடர்ந்து தேர்வுகளில் முதல் மதிப்பெண் பெற்று வருகிறேன்.
ஆனால் அவர் சொன்னதை போல கழிவறை கட்டி தராமல் என்னை ஏமாற்றி விட்டார் என தெரிவித்தார்.
இதை கேட்டு பொலிசார் மிரட்சியடைந்த நிலையில், ஹனிபாவின் தந்தை அனுல்லாவை வரவழைத்து வீட்டில் கழிவறை கட்ட அறிவுறுத்தினர்.
இது பற்றி ஆம்பூர் சுகாதார ஆய்வாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஹனிபாவின் வீட்டில் கழிவறை கட்டுவதற்கான பணியை ஊழியர்கள் தொடங்கியுள்ளனர்.
இது குறித்து ஹனிபாவின் தந்தை அனுல்லா கூறுகையில், எனக்கு கடன் பிரச்சனை இருந்ததால் ஹனிபாவின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை.
என்னிடம் சொன்ன மாதிரி அவர் தேர்வுகளில் முதல் மதிப்பெண் எடுத்தார், இன்னும் ஒரு மாதத்தில் வீட்டில் கழிவறையை கட்டி தருவேன் என கூறியுள்ளார்.