தற்போது நடைபெற்று வரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் ஆள் மாறாட்டம் செய்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கல்முனை, திககொட மற்றும் தனமல்வில ஆகிய பகுதிகளில் உள்ள பரீட்சை நிலையங்களில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் நேற்று நடைபெற்ற கணிதப் பாட பரீட்சை எழுதுவதற்கு இந்த ஆள்மாறட்டம் செய்யப்பட்டுள்ளது.