தங்கையின் கணவனுக்காக கணவனைக் கொலைசெய்துள்ள சம்பவம், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோனியா என்ற பெண்மணிக்கு தங்கையின் கணவன் சிவக்குமாருடன் நீண்ட நாள்கள் தொடர்பு இருந்து வந்துள்ளது.
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ராஜலிங்கம், சிவக்குமார் வீட்டுக்கு வரக்கூடாது சோனியாவிடம் எச்சரித்துள்ளார்.
இதனால், கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது, ஒரு கட்டத்தில், சிவக்குமாரும், சோனியாவும் ராஜலிங்கத்தை இனியும் விட்டு வைக்கக் கூடாது என்று 5 பேருடன் சேர்ந்து ராஜலிங்கத்தின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு பின்னர், தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டதாக நாடகமாடினர்,
ராஜலிங்கம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக அவரின் தாயாருக்கு தகவல்கொடுத்துள்ளார்.
ராஜலிங்கத்தின் மரணத்தில் சந்தேகம் அடைந்த பொலிசார், ராஜலிங்கத்தின் மகன் ஹரீஸிடம் விசாரித்துள்ளனர்.
அப்போது, “வழக்கம்போல அப்பா குளித்துவிட்டு வீட்டுக்குள் வந்தார். பின்னர், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை நடந்தது. அப்போது, 5 பேருடன் எங்க சித்தப்பா வந்தாங்க. பின்னர் எங்க அப்பா தூக்குல கிடந்தாங்க என்று கூறியுள்ளார்.
மகனின் வாக்குமூலத்தில சோனியா பொலிசில் சிக்கினார். சோனியாவைக் கைதுசெய்த பொலிசார் சிவக்குமார் உள்ளிட்ட அஜித், பாலாஜி, காளிமுத்து ஆகிய நால்வரைக் கைது செய்துள்ளது.