திருட்டுக்காதல் விவகாரத்தில் வெட்டு வாங்கிய பாஜக பிரமுகர்!

கோவை மருதமலை ரோடு கல்வீரம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் சாமி (எ) உதயகுமார். பாரதிய ஜனதா கட்சியில் வேலாண்டிபாளையம் மண்டல தலைவராக பதவி வகித்து வரும், இவர்  அந்த பகுதியில் சங்கீதா என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில், பாத்திர விற்பனை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் சங்கீதாவுடன் தொடர்பு ஏற்பட்டு இருவரும் அடிக்கடி, தனிமையில் சந்தித்து ஜாலியாக இருந்து வந்துள்ளனர். ஆனால் நாளைடவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், தனது கட்டிடத்தில் உள்ள கடையை காலி செய்யுமாறு, சங்கீதா சாமியை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இதற்கு சாமி மறுத்து வந்துள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில்  நேற்று இரவு 7:30 மணிக்கு அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் சாமிக்கு சொந்தமான கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். தகவல் அறிந்து கடைக்கு வந்த சாமியை கத்தியால் மூன்று இடங்களில் மரம் நபர்கள் குத்தியுள்ளனர். தன்னை காப்பாற்றிக் கொள்ள ரத்தம் சொட்டச் சொட்ட சாமி, எதிரே இருந்த ஓட்டலுக்குள் ஓடியுள்ளார். மேலும் சாமியின் உடன் வந்தவர்களையும் அந்தக்கும்பல் தாக்கியுள்ளது. இதனையடுத்து அந்தப்பகுதியில் கூட்டம் கூடியதால் மர்ம நபர்கள் தப்பிச்சென்றனர். காயம் அடைந்த சாமி என்ற உதயகுமார் மற்றும் இருவரை வடவள்ளியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு முதல் உதவிக்கு கொண்டு சென்றனர். அங்கு சாமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு இப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அந்தப்பகுதிக்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். இந்தப்பிரச்னை குறித்து சங்கீதாவை காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கல்வீரம்பாளையம் பகுதியில் பதட்டம் நிலவுவதால் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.