மஹிந்தவுக்கு அதிர்ச்சி கொடுத்து ரணிலைச் சந்தித்த முக்கிய புள்ளி!

முன்னாள், மத்திய மாகாண உறுப்பினர் திலின பண்டார தென்னகோன் ஐக்கிய தேசியக் கட்சியில் இன்று இணைந்துகொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த திலின பண்டார தென்னகோன், ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்துவத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.

மத்திய மாகாண விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள், மகளிர் விவகாரங்கள், கிராம அபிவிருத்தி மற்றும் கைத்தொழில்த்துறை முன்னாள் அமைச்சராக திலின பண்டார தென்னகோன் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.