தனுஷ் அனிருத்தை சேர்த்து வைத்த ரஜினி!

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியான தனுஷ் அனிருத் கூட்டணி, ஈகோ பிரச்சனையில் பிரிந்துவிட்ட நிலையில், தற்போது இவர்கள் .இருவரையும் நடிகர் ரஜினிகாந்த் மீண்டும் இணைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வெற்றி கூட்டணியான அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்த, அனைத்து படங்களும் வெற்றி பெற்றது. தனுஷின் பெரும் வெற்றிப்படங்களுக்கு இசையமைத்தவர் அனிருத். மேலும் அனிருத் இசையில், தனுஷ் எழுதிய பாடல்களை வைரல் ஹிட் அடித்த நிலையில், இருவரும் ஈகோ பிரச்சனையில் பிரிந்து விட்டனர். இதற்கு சிவகார்த்திகேயன் ஒரு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் பேட்ட படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பேட்ட படத்தில் ஒரு பாடலை எழுதித்தருமாறு தனுஷிடம் ரஜினி கேட்க, அவர் எழுதிக்கொடுத்த பாடல்தான் ‘இளமை திரும்புதே’. இந்த படலின் மூலம் தனுஷ் அனிருத் இருவரையும் ரஜினி தன் படத்தின் மூலம் இணைத்துள்ளார். மேலும் தனுஷ், அனிருத் இருவரும் ரஜினிக்கு நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள்.  மேலும் பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத், தனுஷ் இருவரையும் ஒன்றாக மேடையேற்றும் திட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அது நடந்துவிட்டால் அவர்களை மீண்டும் ஒன்றிணைக்க திரைத்துறையினர் முயல்வார்கள். எனவே, இருவரும் தானாகவே இணைந்து விடுவார்கள் என கூறப்படுகிறது.