சென்னை சேத்துப்பட்டி ரயில் தண்டவாளத்தில் தனது பேத்தியின் உயிரை காப்பாற்றி தனது உயிரை விட்டுள்ளார் பாட்டி.
அமுதா என்ற பாட்டி தனது பேத்தியுடன் சேர்ந்து ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்றுள்ளார்.
கண் இமைக்கும் நேரத்தில் மின்சார ரயில் ஒன்று வந்துகொண்டிருந்தது. நொடிப்பொழுதில் சுதாரித்துக்கொண்ட பாட்டி, தனது பேத்தியை தூக்கிவீசிவிட்டு ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பேத்தி தர்ஷ்ணியை அங்கிருந்த மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.






