கொடைக்கானலுக்கு காரை ஓட்டிச்சென்ற கணவர் திருப்ப வரவில்லை என குழந்தைகளுடன் ஆட்சியர் அலுவலகத்தில் இளம்பெண் புகார் அளித்துள்ளார்.
மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த அபிமன்யூ (26) வாடகைக்கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த மார்ச் மாதம் வாடைக்காரினை எடுத்து கொண்டு கொடைக்கானலுக்கு சென்றுள்ளார்.
அன்று திடீரென மனைவிக்கு போன் செய்த அபிமன்யூ, வாங்கிய ஒன்றரை லட்சம் பணத்தை திரும்ப கொடுக்காததால் என்னை கடத்திவிட்டனர் என கூறிவிட்டு போனை வைத்துள்ளார்.
அதன் பிறகு பலமுறை முயற்சி செய்த போதும், அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்துள்ளது.
இந்த நிலையில் மதுரை ஆட்சியர் அலுவலகத்திற்கு குழந்தைகளுடன் வந்த அவருடைய மனைவி நாகேஸ்வரி, கணவர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக பொலிஸார் தரப்பில் கூறுகின்றனர். அவர் இல்லாமல் நான் பெரிதும் சிரமப்படுகிறேன். அவரை பற்றிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கண்ணீருடன் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜசேகரனிடம் மனு அளித்துள்ளார்.






