மைத்திரியிடம் திடீர் மாற்றம்! அடுத்து என்ன??

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தினூடாக 19ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் சில திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் விசேட அறிக்கையிட்டுள்ளது.

குறிப்பாக 19ஆம் திருத்தச் சட்டத்தில் அரசியல் ரீதியான முரண்பாடுள்ள விடயங்கள் சில திருத்தியமைக்க அவர் தயாராகியுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் பிரகாரம் 19ஆவது திருத்தச் சட்டம் சிறந்ததொன்றாக விளங்கியபோதிலும் அதிலும் சில விடயங்கள் சீர் செய்யப்படவேண்டுமானால் நாடாளுமன்றினூடாக அரசியல் முரண்பாடுள்ளவை திருத்தப்படுவதற்கே ஜனாதிபதி தயாராகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் தற்பொழுது இழுபறி நிலையிலுள்ள ஆட்சிக் குழப்பத்திற்கு 19ஆவது திருத்தச் சட்டம் பிரதான பங்கு வகிப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

இதிலுள்ள இருவேறுபட்ட சரத்துக்களே மஹிந்த-மைத்திரி தரப்பினதும் ரணில் தரப்பினதும் தனித்தனி வாதங்களுக்கு காரணமாகும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்படியான திருத்தம் செய்வதானால் பாராளுமன்றத்தை கூட்ட வேண்டும் அப்படியான நிலைக்கு வந்து விட்டாரா என இவ் அறிக்கையின் மூலம் சற்று தென்படுவதாக கூறப்பட்டாலும் ஏதோ ஒரு மனமாற்றம் மைத்திரியிடம் தென்படுவதாக அரசியல் அவதானிகள் கூறுகின்றார்கள்..