பிராணா (Piranha):
கடந்த 2010 ம் வருடத்தில் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் (Piranha) “பிராணா”. இந்த திரைப்படத்தில் அழிந்துவிட்டதாக நாம் நினைத்த மனிதர்களை உண்ணும் பிராணா மீன்கள் மீண்டும் வந்து என்னென்ன செய்கிறது என்று கதை இருக்கும். இந்த படத்தில் அதிகளவு ஆபாசம் கலந்திருப்பதன் காரணமாக வீட்டில் இந்த படத்தை பார்த்தால் உங்களுக்கு தீபாவளி விருந்து கண்டிப்பாக சலுகைகளோடு உடனடியாக வழங்கப்படும்.
ஸ்பிலைஸ் (Splice):
கடந்த 2009 ம் வருடத்தில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் (Splice) “ஸ்பிலைஸ்”. இந்த திரைப்படத்தில் அனைத்து உயிரினங்களின் மரபணுக்களை வைத்து உருவாக்கப்பட்ட உயிரினம் மனிதர்களுக்கு எந்த விதமான தீங்குகளை இழைக்கிறது என்பதே திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் ஆபாச காட்சிகள் தாராளமாக வைக்கப்பட்டுள்ளதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
ராங் டர்ன் (WRONG TURN):
அடுத்த படியாக பார்க்கப்போகும் திரைப்படம் (WRONG TURN) “ராங் டர்ன்”. இந்த படத்தில் மொத்தம் 6 பகுதிகளாக ஒன்றன் பின்னர் ஒன்றாக வெளியிடப்பட்டது. இந்த படத்தின் முதற்பாகமானது கடந்த 2013 ம் வருடத்தில் வெளியிடப்பட்டது.
இந்த படத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் ஆபாச காட்சிகளுக்கும்., கொடூரமான கொலை மற்றும் மனித மாமிசத்தை உயிருடன் தின்னும் காட்சிகளுக்கும் பஞ்சமே இருக்காது. இந்த படங்கள் அனைத்தும் வீட்டில் இருந்து பார்த்தீர்கள் என்றால்., மேற்கூறிய படி தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கான விருந்துகள் அனைத்தும் சிறப்பாக விருந்தளிக்கப்படும் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.









