வளைகாப்பு நிகழ்ச்சியில் கிடைத்த மொய் பணம்.. அப்படியே கஜா புயல் நிவாரணத்திற்கு

தமிழகத்தின் சேலம் மாவட்டத்தில் தம்பதி ஒன்று, வளைகாப்பு நிகழ்ச்சியில் வந்த மொய் பணத்தை கஜா புயல் நிவாரணத்திற்கு அளித்த விடயம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் பொன்னம்மாபேட்டை பகுதியை அடுத்த வாய்க்கால்பட்டறையை சேர்ந்த தம்பதி விஜயன்-பிரபாவதி. இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பிரபாவதி தற்போது 7 மாத கர்ப்பமாக இருக்கிறார்.

இதனால் இவருக்கு நேற்றைய தினம் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

எனவே அவர்கள் அளிக்கும் மொய் பணத்தை, அப்படியே கஜா புயல் நிவாரணத்திற்கு அளிக்க விஜயன்-பிரபாவதி தம்பதியர் முடிவு செய்தனர்.

அதன்படி, மண்டபத்தில் தம்பதியின் பெயர்களுடன், கஜா புயல் நிவாரண நிதி என எழுத்தப்பட்ட பெட்டி ஒன்று வைக்கப்பட்டது.

அதில் நிகழ்ச்சியில் வசூலான மொத்த மொய் பணமும் போடப்பட்டது. தம்பதியரின் இந்த செயலைப் பார்த்து நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் நெகிழ்ச்சியடைந்தனர்.