குடிக்க பணம் வழங்க மறுத்த மனைவி.! மண்ணாங்கட்டி செய்த காரியத்தால் பரபரப்பு.!!

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள திருபுவனை அருகேயுள்ள பி.எஸ்.பாளையத்தில் உள்ள தோப்பு தெருவை சார்ந்தவர் மண்ணாங்கட்டி (42). இவர் தினக்கூலியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவியின் பெயர் சுமதி. இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

கூலித்தொழிலாளியாக பணியாற்றி வரும் மண்ணாங்கட்டி மதுப்பழக்கம் வைத்திருந்ததன் காரணமாக தினமும் பணிக்கு சென்று சம்பளத்தை வாங்கி விட்டு மதுஅருந்தி குடும்ப செலவுகளுக்கு பணம் தராமல் இருந்துள்ளார்.

இதன் காரணமாக மண்ணாங்கட்டியின் மனைவி சுமதி தனியார் நிறுவனத்திற்கு சென்று குடும்பத்தை கவனித்து வந்துள்ளார். இவர் பணிக்கு சென்று வரும்போதெல்லாம் மதுஅருந்த காசு கேட்டு மனைவியிடம் தகராறு அடிக்கடி செய்துள்ளார்.

மேலும் சுமதி பணம் தர மறுக்கும் போதெல்லாம்., அவரின் உறவினர் வீட்டிற்கு சென்று தங்கிவிட்டு 2 நாட்கள் கழித்து வருவத்தை வழக்கமாக கொண்டுள்ளார். இந்நிலையில்., நேற்று முன்தினம் வழக்கம்போல மதுஅருந்த பணம் கேட்டு தகராறு செய்துள்ளார். அப்போது சுமதி பணம் தர மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர் வீட்டை விட்டு வெளியேறினார். மண்ணாங்கட்டி வழக்கம்போல உறவினர் இல்லத்திற்கு சென்றிருக்கலாம் என்று நினைத்து இருந்த மனைவி., அவரின் பழைய வீட்டிற்கு சென்று பொருட்கள் எடுத்துள்ளார்.

அப்போது அந்த வீட்டில் இருந்த அறையில்., மண்ணாங்கட்டி பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் சத்தமிடவே அக்கம்பக்கத்தினர் பதறியபடி சென்றனர். அங்கு சென்ற அவர்கள் தூக்கில் பிணமாக தொங்கிய மண்ணாங்கட்டியை கண்டு அதிர்ச்சியடைந்து., காவல் துறையினருக்கு சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர்.

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் அவரின் பிரேதத்தை மீட்டு., பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.