வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகே மூன்றாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் கைதுசெய்யப்பட்டுள்ளான்.
`
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே பெருமுச்சு கிராமத்தை சேர்ந்த முனிவேல் என்பவருக்கு 8 வயதில் ஒரு மகள் இருக்கிறார். அந்த சிறுமி அருகில் உள்ள பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் என்ற இளைஞன் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.
இதனால் பாதிக்கப்பட்ட அந்த இளஞ்சிறுமி பயந்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை அரக்கோணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் பாலியல் தொல்லை கொடுத்த இளைஞன் மோகன்ராஜை போக்சோ சட்டத்தில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது







