இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட இளம்பெண்ணை வருங்கால கணவரும் குடும்பமும் கொன்று அமிலத்தில் கரைத்து புதைத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உத்திரபிரதேச மாநிலத்தின் லக்னோ நகரில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த கொடூர சம்பவம் தொடர்பில் ஜஹாங்கீர் கான் என்ற இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜஹாங்கீர் கான்(28) என்பவருக்கும் செனப் கான் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இந்த நிலையில் ஜஹாங்கீர் கானுக்கு உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள யுவதியுடன் முறைதவறிய தொடர்பு இருந்ததை செனப் கானுக்கு தெரிய வந்துள்ளது.
இதை அவர் தமது குடும்பத்தாருடன் பகிர்ந்துள்ளார். அவர்கள் மணமகனின் விட்டாருக்கு தெரியப்படுத்தியதுடன், திருமணத்தை நிறுத்தவும் முடிவு செய்துள்ளனர்.
இச்சம்பவம் இரு குடும்பத்தாரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், நண்பர்களின் உதவியுடன் ஜஹாங்கீர் செனப் கானை கடத்திச் சென்றுள்ளார்.
பின்னர் தங்களது தோப்புக்குள் வைத்து அவரை கொலை செய்த ஜஹாங்கீர், குடும்ப உறுப்பினர்களின் ஆலோசனைப்படி சடலத்தை அமிலத்தில் கரைத்து அருகாமியில் உள்ள வனப்பகுதியில் புதைத்துள்ளனர்.
தற்போது 3 ஆண்டுகளுக்கு பின்னர் ஜஹாங்கீர் கானை கைது செய்துள்ள பொலிசார், எஞ்சிய நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.






