அரியலூரில் அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமணன் வயது( 60). இவர் உணவு குழாய் கேன்சர் மற்றும் கால் வீக்கம் காரணமாக கடந்த 18 ஆம் தேதியில் முதல் அரியலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இந்நிலையில் திடீரென லெட்சுமணன் இரவு ஆண்கள் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தகவலறிந்த அரியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நேயாளி லெட்சுமணன் வலி தாங்க முடியாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.